கஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...

கஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.
கஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...
x
வதந்திகளை நம்ப வேண்டாம், பதற்றப்பட வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு, வானொலி, தொலைக்காட்சி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலி மற்றும் சமூகவலைதள பக்கங்களை பின்பற்றலாம்.

வீட்டுக்குள் இருக்கும் மக்கள் அமைதியாக இருப்பதுடன், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் ஏழு நாட்களுக்கு உண்டான உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களான கையிருப்பில் வைக்க வேண்டும்.

டார்ச் லைட், தீப்பெட்டி, கத்தி, கயிறு, குளூகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டியை தயாராக வைத்திருக்கவும். மதிப்புமிக்கவைகளையும், ஆவணங்களையும் நீர் புகாத பெட்டிகளில் வைக்கவும்.

மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயல் கரையை கடந்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.

வெளியில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான கட்டடத்திலோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ தங்க வேண்டும். 

ஈரமாக இருப்பின் மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட கட்டடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்