கஜா' புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இன்று ஆய்வு

கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலாளர் இன்று மாலை 4 மணிக்கு ஆய்வு நடத்துகிறார்.
கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இன்று ஆய்வு
x
தமிழகத்தை நோக்கி கஜா புயல் நகர்ந்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய எட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வருவாய், உள்ளாட்சி, காவல், தீயணைப்பு, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்த இருக்கிறார். தலைமை செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், துறை வாரியான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்