திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோயில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் கடந்த 8ஆம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
x
திருத்தணி முருகன் கோயில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் கடந்த 8ஆம் தேதி துவங்கிய கந்த சஷ்டி  விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின், மூன்றாவது நாளில் மூலவருக்கு திருவாபரணம் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. 

சிங்காரவேலர் கோயிலில் நடைபெற்ற தங்கமயில் ஊர்வலம்



கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு,  நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிங்காரவேலவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்



கந்தசஷ்டி விழாவை ஒட்டி, நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூன்றாம் நாள் விழாவில், உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய முருகன் வள்ளி தெய்வானைக்கு, பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து, முருகப்பெருமானுக்கு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது . 




Next Story

மேலும் செய்திகள்