யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா தொடக்கம்

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா தொடக்கம்
x
2ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனையொட்டி, கோயில் நடை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1 மணி 30 நிமிடத்தில் விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜையும் நடந்தது. சஷ்டி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி பச்சை காவி நிற உடைகள் அணிந்து கோவில் கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்து விரதத்தை தொடங்கினர். இதுபோல் பெண்கள் அடிபிரதட்சனம் செய்து வழிபட்டனர். முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 13ஆம் தேதியும், திருக்கல்யாணம் 14ஆம் தேதியும் நடைபெற உள்ளது. திருச்செந்தூர் வரும் பக்தர்கள் தங்கும் வசதிக்காக, ஆங்காங்கே தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்