உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார்.
உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்
x
* ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995 -இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் முறையில் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது .

* ஓய்வூதியதாரர்கள், நவம்பர், டிசம்பரில் இந்த சான்றிதழை ஓய்வூதியம் பெறும் வங்கி கிளை, இ-சேவை மையம், வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவற்றில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில்,  ஜனவரி மாதம் முதல் ஓய்வு ஊதியம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்