அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி பட்டாசு வெடிப்பு : 725 வழக்குகள் பதிவு : 15 பேர் கைதாகி விடுவிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி பட்டாசு வெடிப்பு :  725 வழக்குகள் பதிவு : 15 பேர் கைதாகி விடுவிப்பு
x
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 4 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், கடலூர், விழுப்புரம், ராசிபுரம், கொடைக்கானல், நெல்லை, கோவை என பல நகரங்களிலும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். விருதுநகரில் 13 வழக்குகளை பதிவு செய்த போலீசார், சாத்தூர் - 15, சிவகாசி - 16, அருப்புக்கோட்டை - 7 , திருச்சுழி - 5, ஸ்ரீ வில்லிபுத்தூர் - 12 மற்றும் ராஜபாளையம் 12 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். பல இடங்களில், பிடிபட்ட சிறுவர்கள், எச்சரிக்கை செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர். ராசிபுரத்தில் கைது செய்யப்பட்ட ஏசி மெக்கானிக், சித்தேஸ்வர பிரபு என்பவர், பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்