தமிழகத்தின் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நிலவரம்

தமிழகத்தில் தற்போது பல்வேறு காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.
தமிழகத்தின் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நிலவரம்
x
* தமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 

* தற்போது 315 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 பேர் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். 

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. 

* பன்றி காய்ச்சலுக்காக ஜனவரி 1 முதல் அக்டோபர் 1 வரை 917 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

* பன்றிக் காய்ச்சலுக்காக ஒரு நாளைக்கு சராசரியாக 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்