குரூப்-2 தேர்வு : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு
பதிவு : நவம்பர் 03, 2018, 12:55 PM
வரும் 11ஆம் தேதி நடத்தப்பட உள்ள குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 11ஆம் தேதி காலை 32 மாவட்டங்களிலும் இந்த போட்டித்தேர்வு நடைபெறும். 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ள இத்தேர்வுக்கு, தகுதியானவர்களின் விவரம், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வு 300க்கும் அதிகமான மையங்களில் நடப்பதாகவும், எழுத்து தேர்வுக்குப் பின் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. ஆயிரத்து 199 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.