"சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்" - அமைச்சர் சரோஜா
பதிவு : நவம்பர் 02, 2018, 04:58 PM
குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

* தமிழகத்தில் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் 51 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

* தமிழகத்தில் உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீதம் சம்பள உயர்வுடன் சிறப்பு காலமுறை சம்பளம் வழங்கப்பட்டதோடு, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று சம்பளம் உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

* தமிழகத்தில் மட்டும் தான் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடம் உள்ளதாகவும், இந்த பணியிடம் மற்ற மாநிலங்களில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

* ஓய்வு பெற்ற 54 ஆயிரத்து 340 சத்துணவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ஆயிரத்து 500ல் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சத்துணவு பணியாளர்களின் சம்பளம், மற்ற படிகள் உள்ளிட்ட நிர்வாக செலவுக்கு 58 சதவீதத்தை அரசு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

* எனவே லட்சக்கணக்கான குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

571 views

பிற செய்திகள்

பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் வெற்றி

பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

68 views

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

10 views

ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவாஸ்கனிக்கு வெற்றி சான்றிதழ்

ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.

14 views

சிக்கிமில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

26 views

மோடி தலைமையில் வளர்ச்சி திட்டங்கள் தொடரும், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழிசை நன்றி

மத்தியில் வளர்ச்சி திட்டங்கள் தொடர, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வாக்களித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.

24 views

சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி

சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.