இறந்து விட்டதாக நினைத்த மூதாட்டி உயிர் பிழைத்த அதிசயம்

குளத்தில் மூழ்கிய மூதாட்டியை இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்ப்பிழைக்க வைத்துள்ளனர்
இறந்து விட்டதாக நினைத்த மூதாட்டி உயிர் பிழைத்த அதிசயம்
x
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குளத்தில் மூழ்கிய மூதாட்டியை மருத்துவமனை கொண்டு செல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் முன்வராத நிலையில், அங்கிருந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்ப்பிழைக்க வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள காசாங்குளத்தில் சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி குளத்தின் மையப்பகுதியில், மிதந்து கொண்டிருந்தார். மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக நினைத்த அப்பகுதி மக்கள் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வேடிக்கை பார்ப்பதும், செல்போனில் படம் பிடிப்பதுமாக குளத்தை சுற்றி நின்றுள்ளனர். தகவலின் பேரில் வந்த தீயணைப்பு படையினர், சடலம் என்று நினைத்தே, முதாட்டியை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட மூதாட்டியை சோதனை செய்த கூட்டத்தில் இருந்த மருந்துவர் ஒருவர், நாடித்துடிப்பு இருப்பதாக கூறி அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்துள்ளார். உடனடியாக கொண்டு சென்றால் உயிரை காப்பாற்றி விடலாம் என்று மருத்துவர் கூற, அங்கிருந்த மக்கள் ஆட்டோவை நாடியுள்ளனர். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் மூதாட்டியை கொண்டு செல்ல முன்வராமல் திரும்பி சென்றுள்ளனர். Next Story

மேலும் செய்திகள்