முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழா: முதல்வர், துணை-முதல்வர் மரியாதை

முத்துராமலிங்கத்தேவரின் 111-வது ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழா: முதல்வர், துணை-முதல்வர் மரியாதை
x
முத்துராமலிங்கத்தேவரின் 111-வது ஜெயந்தியை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா - தேவர் சிலைக்கு முதல்வர்- துணை முதல்வர் மரியாதை

முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்