ஆத்தூருக்கு ரயில் பாதை பெற்றுத் தந்த செய்தியாளர்களுக்கு சிலை வைத்து வழிபடும் மக்கள்

ரயில் பாதை பெற்று தந்த செய்தியாளருக்கு கோவிலில் சிலை வைத்து ஆத்தூர் மக்கள் தங்களது நன்றியை வழிபாடு மூலமாக செலுத்தி வருகின்றனர்.
ஆத்தூருக்கு ரயில் பாதை பெற்றுத் தந்த செய்தியாளர்களுக்கு சிலை வைத்து வழிபடும் மக்கள்
x
சேலம் மாவட்டம், ஆத்தூரில் 1905-ல் பிறந்த சீதாராமன் எஸ்.எஸ்.எல்.சி., படித்த பின்னர், கோவையில் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்ததுடன், ஆத்துார், கடைவீதியில் உள்ள 'லண்டன் மிஷன் பள்ளி'யில், ஆசிரியராக பணிபுரிந்தார். அந்த காலத்தில் ஜி.சுப்ரமணிய அய்யர் நடத்தி வந்த, 'சுதேசமித்ரன்' பத்திரிகையில், பகுதி நேர நிருபராக பணிபுரிந்தார். 1930ல், ஆத்துார் வழியாக, சேலம் - விருத்தாச்சலம் ரயில் பாதை அமைக்கக் கோரி, கையெழுத்து இயக்கம் நடத்தி, 600 பேரிடம் கையெழுத்து பெற்று, ஆங்கிலேய அரசிடம் வழங்கியுள்ளார் சீதாராமன். 


இதனைத் தொடர்ந்து 1932ல், ரயில் பாதைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பாதையும் அமைக்கப்பட்டது. 1983ல், 78-வது வயதில் சீதாராமன் காலமானார். அவரது பணியை போற்றும் வகையில், வரசித்தி விநாயகர் கோவில் கோபுரத்தில், சீதாராமனுக்கு, உருவச்சிலை வைத்து, அப்பகுதி மக்கள் இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர். பள்ளி ஆசிரியர், கால்பந்து வீரர், பத்திரிகையாளர் என பன்முக திறமை கொண்ட சீதாராமன், சுதேசமித்ரன் பத்திரிகையில், உதவி ஆசிரியராக பாரதியார் பணிபுரிந்த போது செய்தியாளராக பணியாற்றிய பெருமையை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்