18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு முழு விவரம்

தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 - வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு முழு விவரம்
x
* தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 - வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார். 

* இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய நீதிபதி, பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற தடையையும் நீக்கி, உத்தரவிட்டார். 

* தமிழக அரசியலில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், 3- வது நீதிபதி சத்திய நாராயணன் பரபரப்பு தீர்ப்பை வழங்கி
உள்ளார். 

* இதன்படி, 18 எம். எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி அறிவித்தார். இவர்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லை  -  தகுதி நீக்கம் சட்ட விரோதமானது இல்லை என்றும் நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.

* எனவே, 18 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை  தள்ளுபடி செய்வதாக நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார். 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கிய நீதிபதி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி, உத்தரவிட்டார். 

* தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை, சபாநாயகர் தனபால், முறையான கால அவகாசம் கொடுத்து, சரியான படியே நடவடிக்கை எடுத்து உள்ளார்
என்று நீதிபதி தமது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.

* அரசு கொறாட  பிறப்பித்த உத்தரவின் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாட்சியத்தையும் ஆராய்ந்து பார்த்து தான் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என்றும் நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

* இரு தரப்பு வாதங்களின் அடிப்படையில், தன்னிச்சையாக இந்த தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.





Next Story

மேலும் செய்திகள்