அண்ணாமலை பல்கலையில் முறைகேடு, முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் மீது வழக்கு பதிவு

சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன், மற்றும் முன்னாள் பதிவாளர் ரத்தின சபாபதி ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அண்ணாமலை பல்கலையில் முறைகேடு, முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் மீது வழக்கு பதிவு
x
* கடந்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை, பதவியில் இருந்த போது, இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், முதல் தகவல் அறிக்கையில் பல விவரங்களை பதிவு செய்துள்ளனர்.

* அந்த அறிக்கையில், பணியாளர்களின் ஓய்வூதிய நிதியை, பயன்படுத்தி 40 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு கொடுத்த நிதியை தனியார் சுயநிதி பாடங்களுக்கு முறைகேடாக நிதியை ஒதுக்கி மோசடி செய்ததும் அம்பலமாகியுள்ளது. 

* பணியாளர்கள் நியமனத்தில் அதிகளவு லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். 

* இதற்காக, முன்னாள் துணைவேந்தர் ராமநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் ரத்தின சபாபதிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்