வரதட்சணை கேட்டு மருமகளை அரிவாளால் வெட்டிய மாமியார்...

திருவாரூரில் வரதட்சணை கேட்டு மருமகளை வெட்டிய மாமியாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வரதட்சணை கேட்டு மருமகளை அரிவாளால் வெட்டிய மாமியார்...
x
திருவாரூரை சேர்ந்த கிஷோர்ராஜா என்பவர் கார் பரிசோதனை மையம் வைத்து நடத்தி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த அவர், மனைவி ஜெயநந்தினியிடம் 20 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி தரச்சொல்லி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் வீட்டிற்கு சென்று திரும்பிய ஜெயநந்தினி பணம் வாங்கி வராததால் ஆத்திரமடைந்த கிஷோர் ராஜாவின் தாய்  ஜெயநந்தினியை வெட்டியுள்ளார். கிஷோர் ராஜாவின் குடும்பத்தாரும் ஜெயநந்தினியை தாக்கியுள்ளனர். கையில் பலத்த காயமடைந்த ஜெயநந்தினி, தனது குழந்தையுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் கிஷோர் ராஜாவின் தாய் மற்றும், அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்