இடைத்தேர்தல் ஒத்திவைப்பு ஏன் ?...

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதிய தகவல் வெளியாகியுள்ளது.
இடைத்தேர்தல் ஒத்திவைப்பு ஏன் ?...
x
* 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தமிழகத்தில் மழைக்காலம் முடிந்த பிறகு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைதேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

* இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடித விவரங்கள் வெளியாகியுள்ளன.  தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு அதிகமாக பருவமழை  பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* கடந்த 3 ஆண்டுகளாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் பெய்த அதிக மழை மற்றும் புயல்கள்  காரணமாக  கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* டெல்டா பகுதியான திருவாரூர் தொகுதியில் இந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என்றும், அங்கு  ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மாநில அரசு எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பது சரியாக இருக்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

* இதேபோல் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த அதிமுக உறுப்பினர் ஏ.கே. போஸின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

* தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி சரவணன் தொடர்ந்த வழக்கின் விசாரணை இறுதி வாதங்களுக்காக வரும் 23 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இடைத்தேர்தல் அறிவித்தால் அது உயர்நீதிமன்ற அதிகார வரம்பை மீறுவதாகும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழக்கு முடியும் வரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்றும் அதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்