தமிழகத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
* நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திசையன்விளை, இட்டமொழி, மூலைக்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

* திருவண்ணாமலையில் மதியம் 3 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. 

* இதேபோல விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த மழை பெய்தது.

* பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதியம் முதல் பரவலாக மழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து, மாலையில் குளிர்ச்சி நிலவியது. தொடர் மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்