திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்...

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்...
x
திருப்பதிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்றிரவு அங்கு தங்கி, இன்று அதிகாலை அஷ்டதள பாத பத்ம ஆராதனா சேவையில் கலந்து கொண்டார். கோவிலுக்குள் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேத மந்திரங்கள் முழங்க முதலமைச்சருக்கு ஆசிர்வாதம் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர், அங்கிருந்த ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். பின்னர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். 

"முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு"

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் காட்பாடியில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  காட்பாடி வழியாக சேலம் சென்றார். அப்போது அதிமுகவினர் மேளதாளம் முழங்க முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.Next Story

மேலும் செய்திகள்