தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை
x
* திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளான மங்கலம், பல்லடம், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.  வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


* தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் திடீரென மழை பெய்தது. 

* ஊட்டியில் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. அங்கு கடந்த  ஒரு வாரமாக வெயிலுடன் கூடிய சீதோஷ்ன நிலை நிலவி வந்தத நிலையில் திடீரென மழை பெய்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

* திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால்  நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குளங்களில் நீரோட்டம் பெருகி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்