அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்

சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி பள்ளி அருகே கழிவுநீருடன் புதர் மண்டி காணப்படுவதால், குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்
x
* சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டியில் உள்ள சின்னையாபுரம் அங்கன்வாடி பள்ளியை சுற்றிலும் கழிவு நீர் தேங்கி  புதர் மண்டி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

* அங்கன்வாடி பள்ளிக்கு செல்லும் பாதையில் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவை நடமாடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள், பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.

* அங்கன்வாடி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது. பள்ளிக்கு உரிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது, சின்னையாபுரம் மக்களின் கோரிக்கையாகும்.



Next Story

மேலும் செய்திகள்