பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

கடந்த இரண்டு மாத காலமாக பெட்ரோல் டீசல் விலை தினமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
x
கடந்த இரண்டு மாத காலமாக பெட்ரோல் டீசல் விலை, தினமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த பத்து நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 2 ரூபாய் 18 காசுகள் அதிகரித்துள்ளது. இதேபோல, டீசலின் விலையும் 2 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 31 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட16 காசுகள் அதிகம். இதேபோல, ஒரு லிட்டர் டீசல், 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 6 காசுகள் அதிகம். 

இந்த விலையுயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்