4 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கிய நண்பர்கள்...
கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தில் திருமண பரிசு பொருளாக 4 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பிரபு மற்றும் திவ்யா ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெற்றபோது, சக ஆட்டோ ஓட்டுநர்கள், நண்பர்கள் இணைந்து, 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மணமகன் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த பரிசு அவருக்கு உதவும் என சக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
Next Story