கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
பதிவு : செப்டம்பர் 16, 2018, 08:27 AM
கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.
இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் தாலுக்கா அலுவலகம் முன்பு, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனிடையே, கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே சலசலப்புதிண்டுக்கல் குடை பாறைப்பட்டியில் பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக  விநாயகர் சிலை எடுத்து செல்லும்போது, சாலையிலேயே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது இளைஞர்கள் சிலர் முழக்கங்கள் எழுப்பியதால், அப்பகுதி இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கு சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் சமரசம் செய்து மீண்டும் ஊர்வலம் துவங்கி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள குளத்தில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல் - பாட்டில் வீச்சுதிருவண்ணாமலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்கள் மற்றும் பாட்டில் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது. காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சமுத்திரம் காலனி பகுதி வழியாக வந்த போது மர்ம நபர்கள் சிலர் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நிகழ்ந்த சோகம்

திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது, புதை மணலில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

139 views

விநாயகருக்கு கண்... மனிதர்களுக்கு விஷம்...

விநாயகர் பொம்மையை வாங்கி அதுக்கு கண்ணு வைக்கிறோம்னு ஒரு அழகான மணியையும் வாங்குவோம், அந்த அழகுக்குப் பின்னாடி இருக்குற ஆபத்தை இப்ப தெரிஞ்சிக்கலாம் வாங்க...

16934 views

பிற செய்திகள்

அரசின் பசுமை வீட்டில் இயங்கிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

அரசின் பசுமை வீட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

84 views

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலைமறியல்

கடலூர் மாவட்டம் குமாரக்குடி சேர்ந்த 13 வயது சிறுமியை திலகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

40 views

அழகம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது.

9 views

அ.தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

அ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

620 views

முகிலனை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு

காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

52 views

ஆந்திராவில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி : திருமாவளவன் அறிவிப்பு

ஆந்திரா மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்

150 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.