பெட்ரோல், டீசல் விலை இன்றும் புதிய உச்சத்தை தொட்டது

எண்ணெய் நிறுவனங்களால் தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை இன்றும் புதிய உச்சத்தை தொட்டது
x
எண்ணெய் நிறுவனங்களால் தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 84 ரூபாய் 19 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இது நேற்றையை விலையை விட 14 காசுகள் அதிகம் ஆகும். இதேபோல, ஒரு லிட்டர் டீசல் 77 ரூபாய் 25 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 12 காசுகள் அதிகம் ஆகும். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகளும் சாதாரண மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்