ஐ.டி. நிறுவன பெண் ஊழிய​ரின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது

சென்னையில் ஐ.டி.நிறுவன பெண் ஊ​ழியரை காதலித்து நகை, பணம் மோசடி செய்ததுடன், இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டிய இளைஞர் கைது செய்து ​சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஐ.டி. நிறுவன பெண் ஊழிய​ரின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது
x
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வ​ர் என்வருக்கும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கும் இணையதளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறிய நிலையில், தான் ஒரு டான்சர் என்றும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் அதற்கு பணம் வேண்டும் என்றும் விக்னேஸ்வர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் ஊழியர் 25 சவரன் நகை மற்றும் இரண்டரை லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

 ஒரு கட்டத்தில் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து நகை, பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வர், இருவரும் இணைந்து இருந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில், விக்னேஸ்வரை கைது செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், அவரிடம் இருந்து 19 சவரன் நகையை மீட்டனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்