வீணாகக் கடலில் கலக்கும் மேட்டூர் அணை நீர் - 'பம்பிங்' முறை மூலம் நீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, பம்பிங் முறை மூலம் ஏரிகளில் நீர் நிறப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீணாகக் கடலில் கலக்கும் மேட்டூர் அணை நீர் - பம்பிங் முறை மூலம் நீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
x
தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையால், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக் கணக்கான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில், தற்போழுது மேட்டூர் அணையில் இருந்து சுமார் இரண்டு லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப் பாதையில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படாததால்,  விவசாயத்திற்கு பயன்பட வேண்டிய நீர், வீணாகக் கடலில் கலப்பதாக விவசயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, ஆனால் மேட்டூர் அணையின் அருகிலேயே இருந்தும் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள வேப்பமரத்துப்பட்டி, பூலாம்பட்டி போன்ற பகுதிகள் வறட்சியில் வாடுகின்றன.. 
 காவிரி ஆற்றுப் பகுதியில், ஒரு நிலத்தை வாங்கி அங்கு ஆகவே கிணறு தோண்டி, குழாய் பதித்து, பம்பிங் முறை மூலம் நீரைப் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தொட்டி ஒன்றில் சேமிக்கப்படுகிறது. இந்தமுறை மூலம், சுமார் இருநூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்தால், நீர் கடலில் கலப்பதை தடுத்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என சேலம் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்