திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க உரிய அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்ட சிலைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்
x
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் வைப்பதற்காக சோழவரத்தில் இருந்து 2 சிலைகள் கொண்டு வரப்பட்டன. இரண்டு சிலைகளும் ஃபைபர் பொருட்களால் செய்யப்பட்டிருந்தது. 

வெள்ளை வேட்டி அணிந்து இருக்கையில் அமர்ந்தவாறு உள்ள சிலையின் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றும், மற்றொரு சிலை 80 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் நினைவிடத்தில் சிலைகளை வைக்க உரிய அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்டதால் அதனை அங்கு வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சிலைகள் திருப்பி அனுப்பப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்