காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்
x
காஞ்சிபுரம்  மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட 7 தாலுக்காக்களில் இருந்து பெறப்பட்ட, 46 புள்ளி 5 டன் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் மாவட்ட 
ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட105 டன் நிவாரண பொருட்களின் மதிப்பு ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்: கேரள மாநிலத்திற்கு லாரியில் அனுப்பிவைப்பு
   காரைக்குடி மக்களிடம் சேகரிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரிசி, கோதுமைமாவு, ரவை, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் லாரியில் கொண்டு செல்லப்பட்டன. காரைக்குடி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இந்த நிவாரணப் பொருட்களை சேகரித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்