கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் கன மழையினால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
 
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் கன மழையினால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால், நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
 
மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


 
  இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Next Story

மேலும் செய்திகள்