ஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...

சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலான நீதிபதிகள் புறக்கணித்தனர்.
ஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...
x
சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் மாலையில் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அழைப்பை ஏற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆனால், நீதிபதிகள் ஒட்டுமொத்தமாக இந்த தேநீர் விருந்தை புறக்கணித்து விட்டனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில், நீதிபதிகளுக்கு பின் இருக்கை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த புறக்கணிப்பு செய்யப்பட்டது. அதேநேரம், ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில், தலைமை நீதிபதி தஹில் ரமானி கலந்து கொண்டார். நீதிபதிகள் புறக்கணித்ததால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள், காலியாக இருந்தன.Next Story

மேலும் செய்திகள்