தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 

இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், கூடுதல் இழப்பீடு கோரியும், போராட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், ரஜினி என்பவர் உள்ளிட்ட 15 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

மேலும், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்