2 முறை நிரம்பிய மேட்டூர் அணை - வறட்சியில் தஞ்சை ஏரிகள்!

மேட்டூர் அணை நிரம்பிய நிலையிலும் கூட, பாசன ஏரிகள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை
2 முறை நிரம்பிய மேட்டூர் அணை - வறட்சியில் தஞ்சை ஏரிகள்!
x

மேட்டூர் அணை 2-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு வந்து சேர்ந்து நீண்ட நாட்களாகியும், பாசன ஏரிகளுக்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள காவனி ஏரி, சானுரப்பட்டி ஏரி, ஏலா ஏரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி உடனடியாக ஏரிகளுக்கு நீர் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்