அம்மன் கோயில்களில் களைகட்டும் ஆடித்திருவிழா
பதிவு : ஆகஸ்ட் 11, 2018, 10:35 AM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள, பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயிலில், சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தரை மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில்  உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, கடந்த 8ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதிவரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்கவும், 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய அதிரடி சிறப்பு படையினர் முதன்முறையாக குவிக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மஹாமாரியம்மன் ஆலயத்தில் மஹாயாகம்

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஸ்ரீவினைதீர்க்கும் மஹாமாரியம்மன் ஆலயத்தில் நவசண்டி மஹாயாகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பட்டுப்புடவை ஹோமம் ,வஸோத்தார ஹோமம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தருமபுரம் இளைய ஆதீனம்  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

ஒசூர் சிப்காட் பகுதியில் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றுவருகிறது. நேற்று தாய்வீட்டு சீதனப் பொருட்களுடன் பூ கரகங்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு பலவித பொருட்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டது.  இதையடுத்து, கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள், தங்களது உடலில் அலகு குத்தியபடியும், அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடியும், சக்தி கரகம், அக்னி கரகம் போன்றவற்றை நேர்த்திக்கடனாக எடுத்துவந்தனர். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கோலாகலம்

ஆடி கடைவெள்ளியையொட்டி கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். அங்குள்ள மங்காளம்பிகையம்மன், துர்கையம்மன், விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவு நேரத்தில் 500 பெண்கள் குடும்ப நன்மைக்காக குத்து விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். 

பாதாளமாரியம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பாதாளமாரியம்மன் கோயிலில் ஆடிமாத கடைவெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணியப்பட்டு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள பச்சைக்காளி, பவளக்காளிக்கு காய்கனிகளால் அலங்காரமும்,  மூலவர் பாதாள காளியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.  இதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோயிலில் அமர்ந்து வளையலை அணிந்து கொண்டனர். 

முனீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா

தூத்துக்குடியில் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் ஆடித் திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய அம்சமாக உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் 

ஆடிவெள்ளியையொட்டி மேட்டுப்பாளையம் தவிட்டுமாரியம்மன் கோவிலில் 8 ஆயிரம் வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் கருமாரியம்மனுக்கும், பேட்டை மகாமாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பெண்கள் குத்துவிளக்கில் தீபமேற்றி குங்குமத்தாலும், மலர்களாலும் அர்ச்சனை செய்து அம்மனை  வழிபட்டனர்.

பட்டுநெசவு செய்வதுபோல் அம்மனுக்கு அலங்காரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் பட்டு நெசவு தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பட்டு கைத்தறி தொழில் நலிவடைந்த வருவதைத் தடுக்கவும், தொழில் மேம்பாடு அடையவும் வலியுறுத்தி, திருப்புவனம் தோப்புத்தெருவில் உள்ள செல்வமாரியம்மனுக்கு, பட்டு கைத்தறி நெசவு செய்யும் அலங்காரம் செய்து அம்மனை வழிபட்டனர்.

பிள்ளைத்தோட்ட ஆனந்த முத்துமாரியம்மன் தேர் திருவிழா 

புதுச்சேரி பிள்ளைத்தோட்ட ஸ்ரீ ஆனந்த முத்துமாரியம்மன் கோயில் ஆடி மாத பிரமோற்சவ விழாவையொட்டி தேர் திருவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஆடி மாதத்தில் பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் பச்சையம்மன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.

46 views

ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

177 views

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

79 views

தமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

196 views

பிற செய்திகள்

சிறுவர்களை கடத்தி சென்ற பெண்ணை விரட்டி பிடித்த பொதுமக்கள்

திருவாரூரில் சிறுவர்களை கடத்தி சென்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

319 views

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

கோபிசெட்டிபாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

34 views

காவிரி கரையோர பகுதிகளில் "ரெட் அலார்ட்" எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

2379 views

மனநலம் பாதித்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை

சென்னை - ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,குடல் இறக்கம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

498 views

மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு...

மேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

441 views

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்கு தடை கோரிய மனு - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

177 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.