மீண்டும் ரூ.80 ஐ கடந்தது பெட்ரோல் விலை!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 5 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் ரூ.80 ஐ கடந்தது பெட்ரோல் விலை!
x
தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சராசரியாக 77 ரூபாய் 43 பைசாவாக இருந்த பெட்ரோல் விலை, 

மே மாதம் திடீரென 81 ரூபாய் 39 பைசாவாக அதிகரித்தது. இது எப்போதும் இல்லாத அளவுக்கு, முதல் முறையாக 80 ரூபாயைக் கடந்ததால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன்பிறகு, பெட்ரோல் விலை குறைந்ததை அடுத்து, ஜூன் மாதம் 78 ரூபாய் 40 பைசாவாக சரிந்தது. இது, வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதலை தந்தது.

இந்நிலையில், ஜூலை மாதம் சராசரியாக 79 ரூபாயாக நீடித்த விலையானது, இன்று மீண்டும் 80 ரூபாயை தாண்டியது.

இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 5 பைசாவிற்கு  விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலையை பொருத்தமட்டில், 
கடந்த மாதம் 71 ரூபாய் 41 பைசாவாக இருந்தது, தற்போது 72 ரூபாய் 40 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்