ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர், ஆவண காப்பக மேலாளர் விளக்கம்

அப்பல்லோ மருத்துவமனையின் நீரிழிவு மருத்துவர் வெங்கட்ராமன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர், ஆவண காப்பக மேலாளர் விளக்கம்
x
2016 செப்டம்பர் 27-ம் தேதி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து ஆய்வு செய்ததாகவும், அப்போது சிகிச்சை சரியாக இருந்ததாகவும் கூறிய மருத்துவர் வெங்கட்ராமன், அதன்பின் தான் அழைக்கப்படவில்லை என்றார்.

அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் ஆணையத்தில் அளித்த சாட்சியத்தில்,  ஜெயலலிதா இனிப்புகள் சாப்பிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, ஆயிரத்து 200 கலோரிக்குள் இருந்து விட்டால் பிரச்சினை இல்லை என சாட்சியம் அளித்து உள்ளாரே என கேட்டதற்கு, அப்படி கொடுத்திருந்தால் தவறு என வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் ஆவண காப்பக மேலாளர் கோவிந்தராஜனும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களை தவிர, வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், ஆவணங்கள் அனைத்தும் தேதி வாரியாக பராமரிக்கப்படவில்லையே என வழக்கறிஞர்கள் கேட்டதற்கு, அதனை ஆவண காப்பக மேலாளர் கோவிந்தராஜன் ஒப்புக் கொண்டதாக ஆறுமுகசாமி ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்