கடலூர் மாவட்டம் வெள்ளப்பாதிப்பில் இருந்து நிரந்தரமாக காப்பாற்றப்படும் என அம்மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் கூறியுள்ளார். கடலூர் கெடிலம் ஆற்றின் கரையோர பகுதிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆற்றின் கரையோரங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.