"ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு"

தற்காலிக மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை விடுத்த கோரிக்கையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு
x
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட பணியாளர்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பவும், தற்காலிக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என ஆலை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமிலங்கள், எரிபொருட்களை நிபுணர் குழு அளித்த அறிக்கையின்படி 90 நாட்களுக்குள் அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,

ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்கவோ, தற்காலிக மின் இணைப்பு கொடுக்க வேண்டிய அவசியமோ இல்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை முடித்து வைத்தனர்.

"1500 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது..." - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டம், மில்லர்புரத்தில், மேம்பாட்டு தொழில் வழிகாட்டுதல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தொடங்கி  வைத்தார். பின்னர் முதியோர்களுக்கான பேட்டரி கார் சேவையை  தொடங்கி  வைத்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நேற்று வரை ஆயிரத்து 500 டன் மெட்ரிக் கந்தக அமிலமும், 100 டன் பாஸ்பரிக் அமிலமும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அப்போது சந்தீப் நந்தூரி, கூறினார். இது தவிர பெட்ரோலிய பொருட்களை வெளியேற்ற அந்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்