விளம்பரத்திற்காக பெட்ரோல் குண்டு வீச்சு - இந்து மக்கள் கட்சியினர் கைது

கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது
விளம்பரத்திற்காக பெட்ரோல் குண்டு வீச்சு - இந்து மக்கள் கட்சியினர் கைது
x
விளம்பரத்திற்காக பெட்ரோல் குண்டு வீச்சு

திருவள்ளூர் அருகே விளம்பரத்திற்காக கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த  காளிகுமார், இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். இவர், காரில் தனது  நண்பர் ஞானசேகருடன், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில்  கார் தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக காளிகுமார் அளித்த புகார் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விளம்பரத்திற்காக காளிகுமாரே ஆட்களை அமர்த்தி தனது கார் மீது பெட்ரோல் குண்டு வீச சொன்னது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காளிகுமார், ரஞ்சித், ஞானகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
Next Story

மேலும் செய்திகள்