கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தொட்டிகளில் தண்ணீர் ​நிரப்பும் பணி துவக்கம்

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் நீரின்றி வனவிலங்குகள் தவிப்பதாக தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானதன் தாக்கமாக, அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் ​நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தொட்டிகளில் தண்ணீர் ​நிரப்பும் பணி துவக்கம்
x
கோடியக்கரை சரணாலயத்தில், வனவிலங்குகளுக்காக, 52 இயற்கை குளங்களும், 17 தொட்டிகளும் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, வனவிலங்குள் சிரமத்திற்குள்ளானதாக தந்தி டி.வி.யில் நேற்று முதல் செய்தி ஒளிபரப்பானது. 

 
இதன் எதிரொலியாக, நாகை மாவட்ட வன உயிரின​ காப்பாளர் நாகதிஷ் கிரிஜாலா, சரணாலயத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வை அடுத்து, தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி, துவங்கி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்