2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி - 8 ஆண்டுக்கு பின்னர் இந்தியா 'ஒயிட்வாஷ்'

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது.
2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி - 8 ஆண்டுக்கு பின்னர் இந்தியா ஒயிட்வாஷ்
x
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. 2வது இன்னிங்சில்124 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 7 ரன்கள் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் நியூசிலாந்துக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 36 ஒவர்களில்132 ரன்கள் எடுத்தது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றி உள்ளது. இந்த தோல்வியின் மூலம் இந்தியா 8 ஆண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதன் முறையாக இந்தியா தொடரை இழந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்