நியூசிலாந்துக்கு 132 ரன்கள் வெற்றி இலக்கு - 2வது இன்னிங்சில் இந்தியா 124 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற, 132 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்துக்கு 132 ரன்கள் வெற்றி இலக்கு - 2வது இன்னிங்சில் இந்தியா 124 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x
கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற, 132 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. விஹாரி 9 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 4 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் ஆட்டமிழக்க இந்திய அணி 124 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்