இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா - முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா - முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
போட்டியின் கடைசி நாளான இன்று 395 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர்கள், ஜடேஜா, முகமது ஷமியின் பந்து வீச்சில் சிக்கி திணறினர். உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 8 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்த போதிலும் முத்துசாமி, டேன் ஆகியோர் சிறப்பாக ஆடி இந்தியாவின் வெற்றியை தாமதப்படுத்தினர். உணவு இடைவேளைக்கு பின் இந்த இணையை, முகமது ஷமி பிரிக்க, 191 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்1 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்