டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் கைப்பந்து போட்டி : 8 அணிகள் பங்கேற்பு - சிவந்தி ஆதித்தனார் கல்லூரி 2ஆம் இடம்

தமிழக உடற்கல்வியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் களைகட்டியது.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் கைப்பந்து போட்டி : 8 அணிகள் பங்கேற்பு - சிவந்தி ஆதித்தனார் கல்லூரி 2ஆம் இடம்
x
தமிழக உடற்கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நடைப்பெற்றது. மூன்றாம் தேதி முதல், மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில், சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியல் கல்லூரி, சென்னை ஒய்.எம்.சி.ஏ கல்லூரி, கரூர் சேரன், நாகர்கோவில் கிறிஸ்டியன், வீரவநல்லூர் ஜான்ஸ், கோயம்புத்தூர் மாருதி, நாமக்கல் செல்வம் ஆகிய கல்லூரிகள் மோதின. இந்தப் போட்டியில், கல்லூரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியல் கல்லூரி இரண்டாம் இடத்தை பிடித்து கேடயத்தை கைப்பற்றியது. முதல் இடத்தை சென்னை உடற்கல்வியல் பல்கலைக்கழக அணி பெற்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்