முகமது ஷமியின் விசா விண்ணப்பம் நிராகரிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முகமது ஷமியின் விசா விண்ணப்பம் நிராகரிப்பு
x
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி தொடங்குகிறது. முகமது ஷமி தொடர்பாக போலீசார் அளித்துள்ள தகவல்களை சுட்டிக்காட்டி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள பி.சி.சி.ஐ. அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. தேவையான ஆவணங்களும் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் முகமது ஷமி நிச்சயம் விளையாடுவார் என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்