பந்து பட்ட ரசிகையிடம் நலம் விசாரித்த ரோகித்

நேற்றைய போட்டியின்போது ரோகித் ஷர்மா 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசினார்.
பந்து பட்ட ரசிகையிடம் நலம் விசாரித்த ரோகித்
x
நேற்றைய போட்டியின்போது ரோகித் ஷர்மா 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசினார். இந்த சிக்சர்களில் ஒரு சிக்சர் அடித்த போது பந்து மீனா என்ற ரசிகை மீது பட்டது. எனினும் அவருக்கு காயம் எதுவும்  ஏற்படவில்லை.  போட்டி முடிவடைந்த பிறகு இந்திய வீரர் ரோகித் சர்மா, மீனாவை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தனது கையெழுத்து போடப்பட்ட தொப்பியையும் பரிசாக வழங்கி சிறிது நேரம் உரையாடி உள்ளார். இந்தச் சம்பவம் ரசிகை மீனாவை மிகவும் மனம் நெகிழவைத்தது. 

இதேபோல, நேற்றைய போட்டியின்போது இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய மூதாட்டி ஒருவர், அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன், அவர்களது பாராட்டையும் பெற்றார். போட்டி முடிந்தவுடன் அந்த மூதாட்டியை இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர்களை, அந்த மூதாட்டி ஆசிர்வதித்தார்.

Next Story

மேலும் செய்திகள்