ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி
x
இலங்கைக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியாக 49 புள்ளி 3 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. 204 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா இலங்கையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 37வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்