ரோகித் சர்மா சர்ச்சை அவுட் - ரசிகர்கள் கொந்தளிப்பு

உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் - இந்தியா மோதிய ஆட்டத்தில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரோகித் சர்மா சர்ச்சை அவுட் - ரசிகர்கள் கொந்தளிப்பு
x
போட்டியின் 5வது ஓவரில்,  கேமார் ரோச் வீசிய பந்தில், ரோகித் சர்மா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். முன்னதாக ரோகித் சர்மாவுக்கு கள நடுவர் அவுட் தர மறுத்ததால், உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் அணி ரிவ்யூ செய்தது. ரிப்ளேயில் பந்து பேட்டில் பட்ட அதே நேரத்தில் பேடில் படுவது போலவும் தெரிந்தது. முறையான ஆதாரம் இல்லாத போதும், பேட்ஸ்மேனுக்கு சாதகமான முடிவு அளிக்க வேண்டியதற்கு பதிலாக மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்க, ரோகித் சர்மா மற்றும் இந்திய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். முக்கியத்துவம் வாய்ந்த உலக கோப்பை போட்டியில் நடுவர் முறையான ஆதாரம் இல்லாமல் அவுட் கொடுத்ததை கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்