பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி : ராகுல்,தோனி அபார ஆட்டம்

பங்களாதேஷுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி : ராகுல்,தோனி அபார ஆட்டம்
x
பங்களாதேஷுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.கார்டிப்பில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்களாதேஷை  எதிர்கொண்டது.முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக தோனி 113 ரன்களும்,லோகேஷ் ராகுல் 108 ரன்களும் விளாசினர்.இமாலய இலக்கை துரத்திய பங்களாதேஷ் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பிரிஸ்டலில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்