ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரை 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி
x
டாஸ் வென்று பந்துவீசிய இந்திய அணி, ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணியை ஆட்டம் காண வைத்த‌து. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, 230 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை சுருட்டியது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹான்ஸ்கோம்ப் மட்டும் அரைசதம் கடந்தார்.  இந்திய அணி சார்பில் சாஹல் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். 

தோனி- 87, ஜாதவ்-61 ரன்கள் விளாசல் : டெஸ்ட், ஒருநாள் தொடரை வென்று கோலி சாதனை

231 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது.   தொடக்க ஆட்டக்கார‌ர் ரோகித் சர்மா 9 ரன்களிலும், தவான் 23 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் கோலி 46 ரன்களில் பெவிலியன் திரும்ப, தோனி, கேதர் ஜாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. கேதர் ஜாதவ் 61 ரன்களும், தோனி 87 ரன்களும் விளாசி, இந்திய அணியின் வெற்றியை 4 பந்துகள் எஞ்சிய நிலையில் உறுதி செய்தனர். இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்தார். ஆட்டநாயகன் விருதை சாஹலும், தொடர் நாயகன் விருதை தோனியும் வென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்