ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்
x
பெர்த் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் என்ற ஸ்கோருடன் 4-ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. கவாஜா 72 ரன்களிலும், கேப்டன் டிம் பெய்ன் 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் முகமது ஷமி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. ராகுல் டக் அவுட்டாகியும், புஜாரா 4 ரன்ளிலும் வெளியேற, கேப்டன் கோலி 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  ரஹானே 30 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவைப்படும் நிலையில், தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.   

Next Story

மேலும் செய்திகள்